பெண் விளையாட்டாளர்களுக்குத் தடையாக இருக்காதீர்! – HANNAH YEOH எச்சரிக்கை!

top-news

விளையாட்டுத் துறையில் ஆண் பெண் என இருபிரிவுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என இளைஞர் விளையாட்டு அமைச்சின் அமைச்சர் HANNAH YEOH தெரிவித்தார். பெண்கள் என்பதற்காக விளையாட்டில் ஈடுபடுத்தப்படாமல் இருக்க கூடாது என்றும், பெண்களுக்காகப் பிரித்தியேக விளையாட்டுகள் இருந்தாலும் அவர்களின் திறமையை வெளிப்படுத்த விளையாட்டு ஒரு முக்கிய தளமாக நாம் அங்கீகரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

விளையாட்டுத் துறையில் பெண்களுக்கு ஆதரவளிக்காவிட்டாலும் பரவாயில்லை, அவர்களுக்குத் தடையாக இருக்க வேண்டாம் என அவர் வலியுறுத்தினார். பெண்கள் விளையாட்டுத் துறையில் ஈடுபடவும் மேன்மையடையவும் இளைஞர் விளையாட்டு அமைச்சு ஆதரவாக இருக்கும் என அவர் நம்பிக்கை அளித்தார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *