பிறை, நட்சத்திரம் இல்லாத தேசியக் கொடி: திட்டமிட்ட செயல் அல்ல என திரங்கானு முதலமைச்சர் விளக்கம்

top-news
FREE WEBSITE AD

கோலா திரங்கானு, ஆக. 10-

திரங்கானு மாநிலம், டத்தாரான் பத்து புருக்கில் பிறை மற்றும் நட்சத்திரச் சின்னங்கள் இல்லாமல் ஜாலூர் கெமிலாங்கை ஏற்றிய சம்பவம் திட்டமிட்டு செய்யப்பட்டதல்ல என மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமது சம்சூரி மொக்தார் தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட இந்தச் சம்பவத்தை தனிப்பட்ட ஒரு சம்பவமாகக் கருதுவதாகவும், அது தற்செயலாக ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

“இது திட்டமிட்டு செய்யப்பட்ட சம்பவம் அல்ல என்றே நான் கருதுகிறேன். இது ஒரு தனிப்பட்ட சம்பவம் மற்றும் தற்செயலாக நடந்ததாகும்,” என அவர் தெரிவித்தார்.

திரங்கானு மாநில அளவிலான 2026 உலக ரேஞ்சர் தின நிகழ்ச்சியை விஸ்மா டாருல் ஈமான் வளாகத்தில் இன்று தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை மாநில அரசு உறுதி செய்யும் என்றும் அகமது சம்சூரி கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *