4 மாதக் குழந்தையைக் கொடுமைப்படுத்திய பெண் கைது!
- Sangeetha K Loganathan
- 14 Nov, 2024
நவம்பர் 14
Ayer Keroh பகுதியில் உள்ள 4 மாதக் குழந்தையைக் கொடுமைப்படுத்தி காயப்படுத்திய 40 வயது வெளிநாட்டுப் பணிப்பெண் கைது செய்யப்பட்டு நேற்று Ayer Keroh Sesyen நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். குழந்தையைக் கவனிப்பதற்காக இந்தோனேசியப் பணிப்பெண்ணைப் பணிக்கு அமர்த்தியதாகவும் தங்கள் 4 மாதக் குழந்தையைக் காயப்படுத்தியதாகப் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் 40 வயது Emi Oktaviani எனும் இந்தோனேசியப் பெண் கடந்த நவம்பர் 4 காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். குற்றத்தை மறுத்த வெளிநாட்டுப் பெண் மேல்விசாரணையைக் கோரியதால் எதிர்வரும் டிசம்பர் 18 மறுவிசாரணையை நடத்தும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Seorang pembantu rumah Indonesia didakwa di Mahkamah Sesyen Ayer Keroh atas tuduhan mendedahkan bayi empat bulan kepada risiko kecederaan. Kes disebut semula pada 18 Disember.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *