சுக்மாவில் பினாங்கு மாநிலம் 36 விளையாட்டுகளில் 40 தங்க இலக்கைக் கொண்டுள்ளது

top-news

ஜார்ஜ் டவுன், மே 14-
சரவாக்கில் ஆகஸ்ட் 17 முதல் 25 வரை நடைபெறவுள்ள 21ஆவது மலேசிய விளையாட்டுப் போட்டியில் (சுக்மா) 40 தங்கங்களை பெற வேண்டும் என்ற இலக்கை பினாங்கு மாநிலம் கொண்டுள்ளது.
பினாங்கு மாநிலம் 37 விளையாட்டுகளில் 36 விளையாட்டுகளில் பங்கெடுப்பதோடு, ஒவ்வொரு விளையாட்டிலும் குறைந்தது ஒரு பதக்கத்தையாவது வெல்லும் என்றும் நம்பிக்கையுடன் இருப்பதாக மாநில இளைஞர், விளையாட்டு, சுகாதாரக் குழுத் தலைவர் டேனியல் கூய் கூறினார்.
40 தங்கப் பதக்கம் என்பது ஓர் இலக்கு மட்டுமே. குறிப்பாக, பினாங்கு, குத்துச் சண்டை போட்டியில் தங்கம் பெறுவதில் முக்கிய பங்கு வகிப்பதாக சுக்மா 100 நாள் கவுன்ட் டவுன் தொடக்க விழாக்குப் பிறகு அவர் சொன்னார்.

அதுமட்டுமல்லாமல், மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டு வீரர்களின் இறுதிப் பட்டியல் இப்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், மொத்த விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் டேனியல் கூறினார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *