சன்வே லகூன் ரோலர் கோஸ்டர் விபத்து: 10 பேர் காயம் – ஜெஃப்ரி சியா உறுதிப்படுத்தினார்
- Surendran Sumdraraj
- 26 Aug, 2026
கோலாலம்பூர், ஆக. 26-
சன்வே லகூன் கேளிக்கைப் பூங்காவில் கடந்த சனிக்கிழமை இரவு ரோலர் கோஸ்டர் விளையாட்டில் ஏற்பட்ட விபத்தை சன்வே குழுமத்தின் நிறுவனர் டான் ஸ்ரீ ஜெஃப்ரி சியா உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தில் மொத்தம் 10 பார்வையாளர்கள் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், உயிரிழப்பு எதுவும் ஏற்படாதது நிம்மதி அளிப்பதாக ஜெஃப்ரி சியா தெரிவித்தார்.
“இது எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கும் சம்பவமாகும். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை,” என அவர் கூறினார்.
விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்போது விரிவான விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தனது ஆரம்பக் கருத்துப்படி, ரோலர் கோஸ்டர் கட்டமைப்பில் பயன்படுத்தப்பட்ட உலோகப் பகுதிகளில் ஏற்பட்ட நீண்டகால அழுத்தம் அல்லது ‘மெட்டல் ஃபடீக்’ காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என ஜெஃப்ரி சியா கூறினார்.
எனினும், விபத்துக்கான அதிகாரப்பூர்வ காரணம் விசாரணை முடிவுகளுக்குப் பின்னரே உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



