அரசு சொத்துகளை விருப்பம் போல விற்காதீர்! பெரிக்காத்தான் எச்சரிக்கை!

top-news

டிசம்பர் 25, 

மலேசிய அரசாத்தின் சொத்துகளை மடானி அரசு விருப்பம் போல விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் Datuk Seri Hamzah Zainudin வலியுறுத்தினார். அரசாங்கச் சொத்துகள் மடானி அரசு சம்பாதித்த சொத்துகள் கிடையாது என்பதை உணர்ந்து ஆட்சியை நடத்துங்கள் என அவர் தெரிவித்தார். 

முக்கியமாக Malaysia Airport Holding Berhad (MAHB) நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்வதாக வெளிவந்துள்ள செய்திகளை மடானி அரசு இதுவரையில் மறுக்கவில்லை. அப்படியானால் அதனை விற்க மடானி அரசு ஆயுத்தமாகி வருகிறதா எனும் கேள்வியையும் அவர் முன் வைத்துள்ளார்.

2023 ஆம் ஆண்டு Malaysia Airport Holding Berhad (MAHB) நிறுவனத்தின் வருவாய் RM4.26 பில்லியனாக இருக்கும் நிலையில் அதன் பங்குகளை ஏன் அரசாங்கம் விற்க முனைப்பு காட்டுகிறது எனும் கேள்வியையும் எதிர்க்கட்சி தலைவர் Datuk Seri Hamzah Zainudin முன்வைத்துள்ளார்.

Ketua pembangkang, Datuk Seri Hamzah Zainudin, menggesa kerajaan Madani berhenti menjual aset negara seperti saham Malaysia Airport Holdings Berhad (MAHB). Beliau mempersoalkan motif penjualan walaupun MAHB mencatatkan RM4.26 bilion hasil.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *