பிகேஆருடன் கூட்டணியில் இருந்தும் அம்னோ ‘முதுகில் குத்துகிறது’: கெஅடிலான் மாநாட்டில் கடும் விமர்சனம்
- Surendran Sumdraraj
- 15 Aug, 2026
ஆயர் கெரோ, ஆக. 15 —
ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோவுடன் இணைந்து செயல்பட்டு வரும் நிலையில், அந்தக் கட்சியின் அரசியல் ஒத்துழைப்பு நேர்மையானதாக இல்லை என்றும், பிகேஆருக்கு “முதுகில் குத்தும்” வகையில் செயல்படுவதாகவும் கெஅடிலான் தேசிய மாநாடு 2026-ல் பிரதிநிதிகள் கடுமையாக விமர்சித்தனர்.
ஆயர் கெரோவில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய சில பிரதிநிதிகள், பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) மூலம் அம்னோ-பாரிசான் நேஷனல் (பிஎன்) உடன் மேற்கொள்ளப்பட்ட அரசியல் ஒத்துழைப்பு, தேர்தல் களத்தில் எதிர்பார்த்த வகையில் பிரதிபலிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினர்.
குறிப்பாக, ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் பிஎச் கூட்டணியின் தேர்தல் செயல்பாடு சரிவடைந்ததை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



