ஈராக்கை வீழ்த்தி வெற்றிநடை போட்ட பிரான்ஸ்

top-news

பிலடெல்பியா, ஜூன் 22 –

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணி தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்து, ஈராகை 3-0 என்ற கோல் கணக்கில் எளிதாக வீழ்த்தியது.

அமெரிக்காவின் பிலடெல்பியா மைதானத்தில் நடைபெற்ற ‘குரூப் ஐ’ பிரிவு ஆட்டத்தில், தொடக்கம் முதலே பிரான்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரான்ஸ் வீரர்கள், ஈராக் அணிக்கு அதிக வாய்ப்புகளை வழங்கவில்லை.

முதல் பாதியிலேயே முன்னிலை பெற்ற பிரான்ஸ், இரண்டாவது பாதியிலும் அதே வேகத்தை தொடர்ந்தது. துல்லியமான தாக்குதல்கள் மூலம் மேலும் இரண்டு கோல்களை அடித்து 3-0 என்ற கணக்கில் வெற்றியை உறுதி செய்தது.

முன்னதாக தனது முதல் போட்டியில் செனகலை 3-1 என்ற கணக்கில் தோற்கடித்திருந்த பிரான்ஸ், தற்போது தொடர்ந்து இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்து ஆறு புள்ளிகளுடன் ‘குரூப் ஐ’ பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளது.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *