எம்பாப்பே இரட்டை கோல்; ஸ்வீடனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிரான்ஸ்

top-news
FREE WEBSITE AD

ஈஸ்ட் ரதர்ஃபோர்ட், ஜூன் 30 –

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 32 அணிகள் சுற்றில், பிரான்ஸ் அணி தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தி ஸ்வீடனை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 16-ஆவது சுற்றுக்கு முன்னேறியது.

மெட்லைஃப் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதல் பாதி முடிவதற்கு முன்பான 45-ஆவது நிமிடத்தில் கைலியன் எம்பாப்பே முதல் கோலை அடித்து பிரான்சுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.

இரண்டாவது பாதியில் பிரான்ஸ் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்தியது. 53-ஆவது நிமிடத்தில் பிராட்லி பார்கோலா கோல் அடித்து அணியின் முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார்.

74-ஆவது நிமிடத்தில் மீண்டும் கோல் அடித்த எம்பாப்பே, தனது இரண்டாவது கோலையும் பிரான்சின் மூன்றாவது கோலையும் பதிவு செய்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *