15 வயது மாணவியைத் தாக்கிய 2 பெண்கள்! காவல்துறை விசாரணை!
- THINAGAREN SANGGAREN
- 06 Sep, 2026
செப்டம்பர் 9,
இளம்பெண்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் 15 வயது பள்ளி மாணவி காயமடைந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும் கோலா பிலா மாவட்டக் காவல்துறைத் தலைவர் Mustafah Hussin தெரிவித்தார். இது தொடர்பானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதாகவும் பாதிக்கப்பட்ட 15 வயது மாணவி போலிசில் புகார் அளித்துள்ளதாகவும் Mustafah Hussin தெரிவித்தார்.
இச்சம்பவம் கடந்த புதன் கிழமை கோலா பிலாவில் உள்ள Dataran Melangகில் நிகழ்ந்ததாக கோலா பிலா மாவட்டக் காவல்துறைத் தலைவர் Mustafah Hussin தெரிவித்தார். 15 வயது மாணவி தனது உறவினர்களுடன் Dataran Melangகில் இருந்த போது மற்ற பெண்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் இதனால் 15 வயது மாணவியை இரு பெண்கள் தாக்கியதாகவும் உடன் இருந்த உறவினர்கள் அவர்களைத் தடுத்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கோலா பிலா மாவட்டக் காவல்துறைத் தலைவர் Mustafah Hussin தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



