பெரிக்காத்தான் சின்னம் வேண்டாம்! பெர்சாத்து சின்னத்திலேயே போட்டியிடுகிறோம்! – முகைதீன் முடிவு!
- THINAGAREN SANGGAREN
- 16 Jul, 2026
ஜூலை 16,
நெகிரி செம்பிலான் தேர்தலில் பெரிக்காத்தான் சின்னத்தில் போட்டியிடாமல் பெர்சத்து வேட்பாளர் பெர்சத்துவின் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என பெர்சத்து கட்சியின் தலைவர் Tan Sri Muhyiddin Yassin தெரிவித்தார். ஜொகூரில் பெரிக்காத்தான் அடைந்த படுதோல்வியிலிருந்து பெர்சாத்து பாடம் கற்றுக் கொண்டதாகவும் பெர்சத்துவின் உறுப்பினர்களிடையே ஏற்பட்ட குழப்பங்களைத் தவிர்க்க பெர்சத்து தனி சின்னத்தில் போட்டியிடுவதாகவும் Tan Sri Muhyiddin Yassin தெரிவித்தார்.
நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பின்னர் பெரிக்காத்தானில் தொடர்ந்து நீடிப்போமா எனோது குறித்தும் பெர்சத்து தலைமை முடிவு செய்யும் என Tan Sri Muhyiddin Yassin தெரிவித்தார். பெரிக்காத்தான் கூட்டணிக்குள் நிலவும் குழப்பங்களையும் சர்ச்சைகளையும் மூடி மறைக்க வேண்டியதில்லை. ஆனால், தேர்தல் காலம் என்பதால் அமைதியாக இருப்போம். கூட்டணிக் கட்சிகளிடையிலான போச்சுவார்த்தைக்குப் பின்னர் நெகிரி செம்பிலான் வேட்பாளர்களைப் பெர்சத்து அறிவிக்கும் என Tan Sri Muhyiddin Yassin தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



