ம.இ.காவும் எங்கள் கூட்டாளிகள்! - பெரிக்காத்தான் Hamzah Zainudin!

top-news

ஜூலை 27,

பெரிக்காத்தான் பாரிசான் என இரு பெரும் கூட்டணிகள் இணையும் போது ம.இ.காவும் எங்கள் கூட்டாளிகள் தான் என எதிர்கட்சித் தலைவரும் பெரிக்காத்தான் கூட்டணிக் கட்சியான Wawasan கட்சியின் தலைவருமான Datuk Seri Hamzah Zainudin தெரிவித்தார். இந்த அரசியல் கூட்டணியில் ம.சீ.ச, ம.இ.கா, கெராக்கான், MIPP கட்சிகளும் உள்ளடங்கி இருக்கிறது. அப்படியானால் பெரிக்காத்தான் இஸ்லாத்தையும்  மலாய்க்காரர்களுக்கானதாக மட்டுமான கட்சியாக நாம் பார்க்க கூடாது என Datuk Seri Hamzah Zainudin தெரிவித்தார். 

பாரிசானுக்கும் பெரிக்காத்தானுக்கு இடையில் ஏற்பட்டிருக்கும் இந்த புதிய உறவு மறைமுகமாக இருந்த போதே ஜொகூரில் பாரிசான் அதிகப் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது என்பதை Datuk Seri Hamzah Zainudin சுட்டிக்காட்டினார். இப்போது நெகிரி செம்பிலான் தேர்தலில் பாரிசான் கட்சியினர்களும் பெரிக்காத்தான் கட்சியினர்களும் இணைந்து வாக்குகளைச் சேகரிக்கிறார்கள். இது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது என Datuk Seri Hamzah Zainudin தெரிவித்தார். இனம், மதம் பாராமல் அனைத்து மக்களுக்குமான நீதியை வழங்கும் ஓர் ஆட்சியை அமைப்பது மட்டுமே பெரிக்காத்தான் பாரிசான் கூட்டணியின் முதன்மை நோக்கம் என Datuk Seri Hamzah Zainudin விளக்கமளித்தார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *