உலகக் கோப்பை இலக்கு இன்னும் நிறைவேறவில்லை – Mbappe

top-news

பாக்ஸ்பரோ, ஜூலை 10-

மொரோக்கோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியிருந்தாலும், உலகக் கோப்பையை வெல்வது குறித்து பிரான்ஸ் அணி அளவுக்கு மீறிய நம்பிக்கையில் மிதக்காது என அணித் தலைவர் Kylian Mbappe தெரிவித்துள்ளார்.

ஆட்டத்தின் முதல் பாதியில் பெனால்டி வாய்ப்பை தவறவிட்ட Mbappe, பின்னர் பிரான்ஸ் அணிக்கான முதல் கோலை அடித்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

ஆனால், இந்த வெற்றி மட்டுமே இறுதி இலக்கு அல்ல என்றும், உலகக் கோப்பை பட்டத்தை வெல்வதற்கு இன்னும் கடினமான பாதை முன்னால் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்தப் போட்டியை முழுமையாக வென்ற பிறகே தங்களுக்கு உண்மையான திருப்தி கிடைக்கும் என்பதை பிரான்ஸ் வீரர்கள் நன்கு அறிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அரையிறுதிக்கு முன்னேறியது மகிழ்ச்சியான தருணமாக இருந்தாலும், அடுத்த கட்டத்தில் சவால் இன்னும் கடினமாக இருக்கும் என அவர் தெளிவுபடுத்தினார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *