சிலாங்கூர் 2026 சுக்மா: பளுதூக்குதலில் பெர்லிஸ் மீண்டும் ஒட்டுமொத்த சாம்பியன்

top-news
FREE WEBSITE AD

காஜாங், ஆக. 21-

 பல ஆண்டுகளாக மேற்கொண்ட கடின உழைப்புக்கு பலன் கிடைத்த நிலையில், சிலாங்கூர் 2026 மலேசிய விளையாட்டு போட்டிகளில் (சுக்மா) பளுதூக்குதல் பிரிவில் பெர்லிஸ் அணி மீண்டும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துள்ளது.

பெர்லிஸ் பளுதூக்குதல் அணியின் தலைமை பயிற்சியாளர் ஃபைஸ் மூசா கூறுகையில், போட்டிக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட 4 தங்கப் பதக்கங்கள் என்ற இலக்கை அணி வெற்றிகரமாக எட்டியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிப்பதாகத் தெரிவித்தார். பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும் வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த சுக்மா போட்டியில் பெர்லிஸ் அணி 4 தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் மூலம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சரவாக் சுக்மாவில் வென்ற பட்டத்தையும் பெர்லிஸ் தக்கவைத்துள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *