ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் RM1 மில்லியன் நிதி சமமாக வழங்கப்பட வேண்டும்
- Surendran Sumdraraj
- 18 Aug, 2026
கோலாலம்பூர், ஆக. 18-
ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் அறிவிக்கப்பட்டுள்ள RM1 மில்லியன் கூடுதல் நிதி, அரசியல் கட்சி பாகுபாடின்றி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சமமாக வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என டிஏபி தேசியத் தலைவர் கோபிந்த் சிங் தியோ வலியுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் கூடுதல் நிதி வழங்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்ற அவர், அந்த நிதி சம்பந்தப்பட்ட தொகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்குப் பெரிதும் உதவும் என்றார்.
எனினும், நிதி ஒதுக்கீட்டை வழங்கும்போது சமத்துவக் கொள்கை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தங்களது தொகுதிகளில் உள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொறுப்பு இருப்பதால், கட்சி அடிப்படையில் நிதி வழங்குவதில் வேறுபாடு இருக்கக்கூடாது என்றும் கோபிந்த் கூறினார்.
“இறுதியில், ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் கூடுதலாக RM1 மில்லியன் வழங்கப்படும் என்ற அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. இது சம்பந்தப்பட்ட தொகுதி மக்களுக்கு நிச்சயமாக உதவும்,” என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



