பெண்கள் மற்றும் ஒற்றைத் தாய்மார்களுக்கான சட்ட உதவியை விரிவுபடுத்த கூடுதல் நிதி தேவை
- Surendran Sumdraraj
- 17 Aug, 2026
கோத்தா கினபாலு, ஆக. 17-
நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் பெண்கள் மற்றும் ஒற்றைத் தாய்மார்கள் தங்களது உரிமைகளைப் பெறுவதற்காக மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளுக்கு உதவ, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ நான்சி ஷுக்ரி கூறினார்.
சில முன்னாள் மனைவிகள் தங்களுக்குரிய உரிமைகளைப் பெற சட்ட நடவடிக்கையைத் தொடர விரும்பினாலும், வழக்கறிஞர் சேவைகளைப் பெறுவதற்குத் தேவையான நிதி வசதி அவர்களிடம் இல்லாத நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.
“சில நேரங்களில் நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியிருக்கும். உதாரணமாக, முத்தா அல்லது குழந்தை பராமரிப்பு தொகையைச் செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தாலும், முன்னாள் கணவர் தொடர்ந்து அந்தத் தொகையைச் செலுத்தாமல் இருக்கலாம்,” என்று அவர் கூறினார்.
இதுபோன்ற சூழ்நிலைகளில், நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பெண்களுக்கு உரிய ஆதரவு அவசியம் என நான்சி வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



