பெட்ரோலில் தண்ணீர் கலப்படமா! 11 பெட்ரோல் நிலையங்களில் ஆய்வு!
- THINAGAREN SANGGAREN
- 07 Oct, 2026
அக்தோபர் 7,
பெட்ரோலில் தண்ணீர் கலப்படம் செய்வதாக வெளிவந்துள்ள சர்ச்சைகளைத் தொடர்ந்து கெடா மாநில உள்நாட்டு வாழ்க்கை செலவீன அமைச்சான KPDN சந்தேகத்திற்குரிய 11 பெட்ரோல் நிலையங்களில் சோதனை மேற்கொண்டது. இச்சோதனையின் ஆரம்பக் கட்ட முடிவுகளில் கலப்படங்கள் ஏதும் கண்டறியப்படவில்லை என்றாலும் இது உறுதியான முடிவல்ல என்றும் சேகரிக்கப்பட்ட மாதிரிகளைத் தேசிய வேதியல் துறைக்கு அனுப்பியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,
அலோர் ஸ்டாரில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் தண்ணீர் கலக்கப்படுவதால் பல வாகனங்கள் பழுதடைந்ததாகத் தொடர் புகார்கள் பெறப்பட்டதை அடுத்து இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் இது தொடர்பான அறிக்கையை உள்நாட்டு வாழ்க்கை செலவீன அமைச்சான KPDN அதிகாரப்பூர்வமாக வெளியிடும் வரையில் தவறானச் செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் கெடா மாநில உள்நாட்டு வாழ்க்கை செலவீன அமைச்சான KPDN கேட்டுக்கொண்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

