உள்கட்சி மோதல்களுடன் பிகேஆர் வலுவான அமைப்பாக முடியாது: நூருல் இஸ்ஸா
- Surendran Sumdraraj
- 14 Aug, 2026
ஆயர் கெரோ, ஆக. 14 —
ஒரே கப்பலை இயக்கும் இரு தலைவர்கள் இருப்பது போன்ற சூழ்நிலை அல்லது அதிகாரத்தின் பின்னணியில் மறைமுகமான அதிகாரக் கட்டமைப்பை உருவாக்கும் “மறை கரங்கள்” இருப்பது போன்ற நிலை தொடர்ந்தால், பிகேஆர் வலுவான அமைப்பாக இருக்க முடியாது என அதன் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் தெரிவித்துள்ளார்.
அதேபோல், தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் ஆற்றல் முழுவதும் உள்கட்சி மோதல்களை எதிர்கொள்வதிலேயே செலவிடப்படும் வரை, கட்சியால் வலுவான அமைப்பாக செயல்பட முடியாது என்றும் அவர் கூறினார்.
“நாம் ஒருவருக்கொருவர் எதிராகப் போராடுவதற்கும், உள்கட்சி மோதல்களில் ஈடுபடுவதற்கும் செலவிடும் ஒவ்வொரு மணிநேரமும், மக்களின் மனதை வெல்வதற்காக பயன்படுத்த முடியாத நேரமாகும்,” என்று அவர் தெரிவித்தார்.
எனவே, கட்சியின் கவனம் முழுவதும் மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுப்பதிலும், நல்ல செயல்களில் போட்டியிடுவதிலும் இருக்க வேண்டும் என நூருல் இஸ்ஸா வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



