2028 ஆம் ஆண்டிற்குள் 2000 கடைகள் - MR.D.I.Y

top-news

எங்களின் MR.D.I.Y நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் 180 கூடுதல் கடைகளைத் தொடங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, 2028 ஆம் ஆண்டிற்குள் எங்கள் இலக்கு 2,000 ம் கடைகளைத் தாண்டுவது என்று MR.D.I.Y தலைமை நிர்வாக அதிகாரி அட்ரியன் ஓங் கூறுகிறார்.


"எங்கள் வளர்ந்து வரும் MR.D.I.Y நெட்வொர்க் எங்களை மேலும் மேலும் பல மலேசியர்களை அணுகும் வகையில் உருவாக்குகிறது, மேலும் 2024 ஆம் ஆண்டில் 180 புதிய கடைகளைத் திறப்பதன் மூலம் இந்த இலக்கினை உறுதிப்படுத்துவதும், 2028 ஆம் ஆண்டில் 2,000 கடைகள் என்ற எங்களின் இலக்கினை மீறுவதும் எங்கள் திட்டம்" என்று ஓங் ஒரு அறிக்கையில் கூறினார்.

வீட்டை மேம்படுத்தும் சில்லறை விற்பனை தொடர்ந்து தனது வணிகத்தில் வலுவான வேகத்தைக் காண்பதாகவும், டிசம்பர் 31, 2024 (FY24) இல் முடிவடையும் நிதியாண்டின் தொடக்கத்தால் மிகவும் ஊக்கமளிப்பதாகவும் ஓங் கூறினார்.

பல்வேறு காலகட்டங்களில்  எங்கள் நிறுவனம் வளர்ச்சியில் செல்வதை  நாங்கள் காண்கிறோம், இது எங்கள் வணிக மாதிரியின் வலிமை மற்றும் பின்னடைவை பிரதிபலிக்கிறது என்று ஓங்  கூறினார்.

"சமீபத்திய மாதங்களில் பணவீக்க அழுத்தங்கள் குறைந்திருந்தாலும்,   அன்றாட வீட்டு அத்தியாவசியப் பொருட்களை மலிவு விலையில் மற்றும் அனைவருக்கும் கிடைக்ககூடியதாக மாற்றுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று ஓங் கூறினார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *