ஸ்டெம் துறையில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் – அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தல்

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், செப். 7 –

அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஸ்டெம் துறைகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது ஸ்டெம் துறைகளில் மாணவர்களுக்கு ஆர்வம் இருந்தாலும், அந்தத் துறைகளை ஆழமாக கற்க முனையும் நிலை இன்னும் போதுமான அளவில் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, தூய அறிவியல் பாடப்பிரிவுகளில் மாணவர்களின் பங்கேற்பு தற்போது சுமார் 15.8 சதவீதமாக மட்டுமே இருப்பதாகப் பிரதமர் தெரிவித்தார்.

மேலும், அதிகமான மாணவர்கள் ஸ்டெம் துறைகளைத் தேர்வு செய்வதை ஊக்குவிப்பதுடன் மட்டும் அரசு நிற்கக்கூடாது என்றும், அவர்கள் அந்தத் துறைகளில் தொடர்ந்து நிலைத்திருந்து, திறமைகளை வளர்த்து, வெற்றி பெற தேவையான ஆதரவும் வழங்கப்பட வேண்டும் என்றும் அன்வார் கூறினார்.

இளம் திறமையாளர்களை அடையாளம் காண்பது மட்டுமல்லாமல், அவர்களுக்குத் தொடர்ந்து வழிகாட்டுதல் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *