ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற நீரு தண்டாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

top-news

புதுடெல்லி, செப். 30 –

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் டிராப் துப்பாக்கிச் சுடுதல் தனிநபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய வீராங்கனை நீரு தண்டாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிர் டிராப் தனிநபர் பிரிவில் சிறப்பாக செயல்பட்ட நீரு தண்டா, புதிய ஆசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் ஆசிய விளையாட்டு வரலாற்றில் மகளிர் டிராப் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

நீரு தண்டாவின் இந்த வரலாற்றுச் சாதனையைப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, அவரது அபாரமான துல்லியமும் நிதானமும் இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், நீரு தண்டாவின் வெற்றி இந்திய விளையாட்டுத் துறைக்கு முக்கியமான தருணமாக அமைந்துள்ளதாகவும், அவரது சாதனை பல இளம் வீரர், வீராங்கனைகளை துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டில் ஈடுபட ஊக்குவிக்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *