இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் வீடியோ காலில் பேசி நலம் விசாரித்த பிரதமர் மோடி
- Surendran Sumdraraj
- 02 Oct, 2026
புதுடெல்லி, அக். 2 –
துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற பிளைதுபாய் விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பான சம்பவத்தில் துணிச்சலாகச் செயல்பட்டு பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ காலில் பேசி நலம் விசாரித்தார்.
விமானத்தின் துணை விமானி, விமானத்தின் கட்டுப்பாட்டை கைப்பற்ற முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற கேப்டன் ஸ்மித் மச்சார் கத்தியால் குத்தப்பட்டு பலத்த காயமடைந்தார். இருப்பினும், தனது காயத்தையும் பொருட்படுத்தாமல் அவர் துணை விமானியை எதிர்த்து போராடி, காக்பிட் கதவை திறந்தார். பின்னர் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் இணைந்து அந்த துணை விமானியைக் கட்டுப்படுத்தினர்.
இதையடுத்து, விமானத்தில் இருந்த மற்றொரு விமானி விமானத்தை சவுதி அரேபியாவின் தபுக் நகருக்கு பாதுகாப்பாக திருப்பி தரையிறக்கினார். இதனால் 170-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். குஜராத்தை சேர்ந்த ஸ்மித் மச்சாரின் துணிச்சலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், வீடியோ காலில் பேசிய பிரதமர் மோடி, ஸ்மித் மச்சாரின் துணிச்சலை பாராட்டியதுடன், அவர் விரைவில் குணமடைய வாழ்த்தும் தெரிவித்தார். அப்போது விமானத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து ஸ்மித் மச்சார் பிரதமரிடம் எடுத்துரைத்தார். மேலும், பிரதமர் மோடி தமக்கு மிகப்பெரிய முன்னுதாரணம் என்றும், அவருடன் பேசியது ஊக்கமளிப்பதாகவும் ஸ்மித் மச்சார் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

