பீகாரில் நீட் வினாத்தாள் கசிவு போராட்டம்: ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
- Surendran Sumdraraj
- 28 Jul, 2026
பாட்னா, ஜூலை 28-
பீகாரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடைபெற்ற மாணவர் போராட்டத்தின்போது, ஏகே-47 துப்பாக்கியால் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் சிவான் மாவட்டத்தில் நடைபெற்ற மாணவர் ஆர்ப்பாட்டத்தின் போது, காவல்துறையைச் சேர்ந்த ஒரு காவலர் கூட்டத்தைக் கலைக்க ஏகே-47 ரக துப்பாக்கியைப் பயன்படுத்திய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. இதையடுத்து, சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட காவலர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போராட்டம் நடைபெற்றபோது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகள் மற்றும் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையின் நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மற்றும் மாணவர் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



