கெந்திங் ஹைலண்ட்ஸில் பெரிய போதைப்பொருள் கும்பல் செயல்படுவதாக வெளியான தகவல் மறுப்பு
- Surendran Sumdraraj
- 17 Aug, 2026
குவாந்தான், ஆக. 17-
கெந்திங் ஹைலண்ட்ஸில் பெரிய அளவிலான போதைப்பொருள் கும்பல் ஒன்று செயல்பட்டு வருவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவலை பகாங் மாநில இடைக்கால போலீஸ் தலைவர் டத்தோ அஸ்ரி அக்மார் அயோப் மறுத்துள்ளார்.
“கெந்திங் ஹைலண்ட்ஸ் அல்லது வேறு எந்த இடத்திலும் சட்டவிரோத சம்பவம் தொடர்பாக போலீஸ் புகார் கிடைத்தால், நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்போம்.
“எனவே, கெந்திங் ஹைலண்ட்ஸில் மிகப்பெரிய போதைப்பொருள் கும்பல் செயல்பட்டு வருகிறது என்று கூறப்படுவதை நான் மறுக்கிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக போலீஸ் எந்தவித அமலாக்க நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர் நிராகரித்தார்.
குவாந்தானில் இன்று நடைபெற்ற பகாங் மாநில குற்றத்தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை தலைமைப் பொறுப்புப் பரிமாற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அஸ்ரி அக்மார் இவ்வாறு கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



