லாஞ்சாங் கோர விபத்து: சிமெண்டு டாங்கர் ஓட்டுநரின் இரத்தப் பரிசோதனை முடிவுக்காக போலீஸ் காத்திருப்பு

top-news
FREE WEBSITE AD

குவாந்தான், செப். 7 –

தெமர்லோவின் லாஞ்சாங் பகுதியில் கிழக்குக் கடற்கரை நெடுஞ்சாலையில் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி 11 வாகனங்கள் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் நால்வர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிமெண்டு டாங்கர் லாரி ஓட்டுநரின் இரத்தப் பரிசோதனை முடிவுக்காக போலீசார் இன்னும் காத்திருக்கின்றனர்.

இந்த விபத்து கிழக்குத் திசை நோக்கி செல்லும் கிழக்குக் கடற்கரை நெடுஞ்சாலையின் 110.4-வது கிலோமீட்டர் பகுதியில் இடம்பெற்றது.

தெமர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் முகமது நஸ்யிம் பஹ்ரோன் கூறுகையில், சம்பந்தப்பட்ட ஓட்டுநரின் இரத்தத்தில் மது அல்லது போதைப்பொருள் இருந்ததா என்பதை கண்டறிவதற்காக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

“தற்போது வரை வேதியியல் துறையிடமிருந்து இரத்தப் பரிசோதனை முடிவுகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. அவற்றுக்காக இன்னும் காத்திருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

இந்த கோர விபத்தில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் நால்வர் உயிரிழந்ததுடன், மேலும் சிலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *