காலிறுதிக்கு முன்னேறியது ஸ்பெயின்
- Surendran Sumdraraj
- 07 Jul, 2026
ஆர்லிங்டன், ஜூலை 7 –
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 16-ஆவது சுற்றில், ஸ்பெயின் அணி பரம எதிரியான போர்ச்சுகலை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றது.
டல்லஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டம் முழுவதும் இரு அணிகளும் எச்சரிக்கையுடன் விளையாடியதால், கோல் வாய்ப்புகள் குறைவாகவே அமைந்தன. கூடுதல் நேரம் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாற்று வீரராக களமிறங்கிய மைக்கெல் மெரினோ ஆட்டத்தின் 90+1-ஆவது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார்.
இந்த வெற்றியின் மூலம் ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் காலிறுதிக்கு முன்னேறியது. மறுபுறம், போர்ச்சுகல் அணி தொடரிலிருந்து வெளியேறியது. 41 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் உலகக் கோப்பை பயணமும் இந்தத் தோல்வியுடன் நிறைவடைந்தது.
காலிறுதியில் ஸ்பெயின், பெல்ஜியத்தை எதிர்கொள்ளவுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



