போர்த்துகலுக்கு அதிர்ச்சி கொடுத்த டி.ஆர். காங்கோ
- Surendran Sumdraraj
- 18 Jun, 2026
ஹூஸ்டன், ஜூன் 18 –
2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ‘குரூப் கே’ பிரிவு தொடக்க ஆட்டத்தில், டெமோக்ரடிக் ரிபப்ளிக் ஆஃப் காங்கோ (டி.ஆர். காங்கோ) அணி பின்தங்கிய நிலையிலிருந்து மீண்டு போர்ச்சுகலுடன் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்று முக்கியமான ஒரு புள்ளியைக் கைப்பற்றியது.
ஹூஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், தொடக்கத்திலிருந்தே தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய போர்த்துகல் அணி 6-ஆவது நிமிடத்திலேயே ஜோவோ நெவ்ஸ் அடித்த கோல் மூலம் முன்னிலை பெற்றது. ஆரம்பக் கோலால் உற்சாகமடைந்த போர்த்துகல் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தாலும், டி.ஆர். காங்கோ வீரர்கள் தற்காப்பில் உறுதியாகச் செயல்பட்டனர்.
முதல் பாதி முடிவடைய இருந்த நிலையில், கூடுதல் நேரத்தில் டி.ஆர். காங்கோ அணியின் நட்சத்திர தாக்குதல் வீரர் யோனே விஸ்ஸா அற்புதமான கோல் அடித்து ஆட்டத்தை 1-1 என சமநிலைப்படுத்தினார். இந்த கோல் காங்கோ அணிக்கு புதிய நம்பிக்கையை அளித்தது.
இரண்டாவது பாதியில் இரு அணிகளும் வெற்றிக்கான கோலைத் தேடி கடுமையாக போராடின. இருப்பினும், இரு அணிகளின் தற்காப்பு ஆட்டமும் சிறப்பாக அமைந்ததால் கூடுதல் கோல்கள் எதுவும் பதிவாகவில்லை.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



