பெரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கின; சாலைகளில் தஞ்சமடைந்த மக்கள்

top-news
FREE WEBSITE AD

லிமா: தென் அமெரிக்க நாடான பெருவில் நள்ளிரவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கின.

பெருவின் பரினகொச்சோஸ் மாகாணத்தில் உள்ள உபஹசொ நகரில் இருந்து சுமார் 38 கிலோமீட்டர் தொலைவில், ஆண்டிஸ் மலைத்தொடர் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் சுமார் 66 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நள்ளிரவு 1 மணியளவில் ஏற்பட்ட இந்த அதிர்வு, ஐகா மற்றும் ஆர்கியுபா உள்ளிட்ட நகரங்களிலும் உணரப்பட்டது. திடீரென கட்டிடங்கள் குலுங்கியதால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் பலர் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *