பந்திங் நகர்ப் புறசேவைகளை வழங்கும் இந்திய சமூகத் தலைவராக சாமிதுரை நியமனம்!
- Muthu Kumar
- 13 Oct, 2024
(எஸ்.எஸ்.மணிமாறன்)
பந்திங், அக்.13 -
பந்திங் நகர்ப் புறங்களில் வசித்து வரும் இந்தியர்களைப் பிரதிநிதித்து தேவையான உதவிகளை வழங்கி அவர்களுக்கான சேவைகளை வழங்கும் நோக்கத்தில் சாமிதுரை இந்திய சமூகத் தலைவராக நியமனம் பெற்றார்.
நேற்று முன்தினம் மதியம் இங்கு பந்திங் சட்ட மன்ற மக்கள் மையத்தில் நடைபெற்ற ஒரு சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மனிதவள மக்கள் நலப் பிரிவின் ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமான் அவரிடம் நியமனக் கடிதத்தை வழங்கி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
பந்திங் வட்டாரத்தில் வாழ்ந்து வரும் இந்தியர்கள் எதிர்நோக்கி இருக்கும் பல்வேறு பிரச்சினைகளைக் கேட்டறிந்து மாநில அரசின் மக்கள் நலத் துறையுடன் தொடர்பு கொண்டு அதற்கான தீர்வை காணும் பொருட்டு சாமிதுரையிடம் நியமனக் கடிதத்தை தாம் ஒப்படைத்ததாக அவர் கூறினார்.
மாநில அளவில் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள இந்திய சமூகத் தலைவர்கள் (கே கே ஐ) தங்களது பதவியைத் தற்காத்துக் கொள்ளும் வகையில் மக்களின் பிரச்சினைகளைக் களைவதில் இந்திய சமூகத்திற்கு சிறந்த முறையில் சேவையாற்றி வர வேண்டும் என்பதே மாநில அரசின் செயல் திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுவதால் சிறந்த சேவையாளர் சாமிதுரையை இந்தப் பதவிக்கு தாம் நியமனம் செய்ததாக பாப்பா ராய்டு தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், கோல லங்காட் நகராண்மைக் கழகத்தின் உறுப்பினர் காளான நடேசன் சுப்ரமணி, கான் யீ சின் கலந்து கொண்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *