போர்க்களத்தில் பிரபாஸ்: ‘பவுசி’ படத்தின் மிரட்டலான போஸ்டர் வைரல்

top-news
FREE WEBSITE AD

சென்னை: நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘பவுசி’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போரினால் சிதைந்த போர்க்களத்தின் பின்னணியில் பிரபாஸ் இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கும் இப்படம் வரலாற்றுப் பின்னணியிலான அதிரடி மற்றும் காதல் கலந்த கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இதில் பிரபாஸுக்கு ஜோடியாக இமான்வி நடிக்கிறார். அனுபம் கெர், மிதுன் சக்ரவர்த்தி, ஜெயப்பிரதா, பானு சந்தர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

புதிய போஸ்டரில் பிரபாஸ், போரில் காயமடைந்த தோற்றத்துடன், ரத்தக்கறை படிந்த உடையுடன் போர்க்களத்தில் அமர்ந்திருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. நீண்ட தலைமுடி, அடர்த்தியான தாடி மற்றும் கையில் துப்பாக்கியுடன் காணப்படும் அவரது தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *