இஸ்மாயிலைப் புகழும் PKR MP - அன்வாரை மறைமுகமாகத் தோற்கடிக்கும் முயற்சி!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, செப் 6: முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பை பிகேஆர் எம்பி ஹசன் கரீம் புகழ்வது அன்வார் இப்ராஹிமை மறைமுகமாக தோற்கடிக்கும் செயல் என அரசியல் ஆய்வாளரும், தேசிய பேராசிரியர்கள் மன்றத்தைச் சேர்ந்தவருமான அஸ்மி ஹாசன் தெரிவித்துள்ளார்.

பாசீர் கூடாங் எம்.பியான ஹசான் கரீம் தனது சொந்தக் கட்சித் தலைவரான அன்வாருக்கு எதிராகப் பல்வேறு பிரச்சினைகளில், குறிப்பாக அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியதை அவர் சுட்டிக்காட்டினார்.

இஸ்மாயிலுக்கு ஹசான் புகழாரம் சூட்டியதில், எம்.பி.க்களுக்கு சமமான நிதியை பகிர்ந்தளிக்கும் விவகாரத்தில் இஸ்மாயிலைப் போல், அன்வாரின் ஒற்றுமை அரசாங்கம் இன்னும் செய்யவில்லை என்று அஸ்மி சுட்டிக்காட்டினார்.

இது இஸ்மாயிலுக்கும் அன்வாருக்கும் இடையிலான தலைமைத்துவ பாணியில் உள்ள வேறுபாட்டை பிரதிபலிக்கிறது.

எவ்வாறாயினும், இஸ்மாயில் பிரதமராக இருந்த காலத்திலும், அன்வாரின் (பிரதமராக) இருந்த காலத்திலும் அரசியல் சூழ்நிலை மிகவும் வித்தியாசமானது என்பதே உண்மை. அப்போதைய நிலைமையை இப்போது ஒப்பிடுவது கடினம் என்று அவர் FMT ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *