கனிமங்கள், சுரங்கங்கள் திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்

top-news
FREE WEBSITE AD

புதுடெல்லி: கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் மேம்பாடு (ஒழுங்குமுறை) திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா சட்டமாகியுள்ளது. 

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மொத்தம் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவை அனைத்தும் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில், ஒவ்வொரு மசோதாவுக்கும் அவர் ஒப்புதல் அளித்து வருகிறார்.

அந்த வகையில், கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் மேம்பாடு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா கடந்த 12-ஆம் தேதி மக்களவையிலும், 13-ஆம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் திருத்தத்தின் மூலம் கனிம நிலங்கள் மீது மாநில அரசுகளுக்கு முன்பு இருந்த சில அதிகாரங்கள், குறிப்பாக வரி விதிக்கும் அதிகாரம், கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கனிம வளங்கள் மற்றும் சுரங்க நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்துவதில் மத்திய அரசின் அதிகாரத்தை அதிகரிக்கும் வகையில் மசோதாவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *