‘வந்தே மாதரம்’ மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல்: அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை
- Surendran Sumdraraj
- 12 Aug, 2026
புதுடெல்லி, ஆக. 12-
தேசியப் பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலுக்குத் தேசிய கீதத்துக்கு இணையான சட்டப் பாதுகாப்பு வழங்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து அந்த மசோதா சட்டமாகியுள்ளது.
‘தேசிய கவுரவச் சின்னங்கள் அவமதிப்பு தடுப்பு சட்டம்’ திருத்த மசோதா, கடந்த மாதம் 29ஆம் தேதி மாநிலங்களவையிலும், 30ஆம் தேதி மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நிலையில், தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
புதிய சட்டத்தின்படி, ‘வந்தே மாதரம்’ பாடலை வேண்டுமென்றே பாடுவதைத் தடுப்பது அல்லது அது பாடப்படும் நிகழ்ச்சியில் இடையூறு ஏற்படுத்துவது குற்றமாகும். இதுபோன்ற குற்றங்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



