ஈக்வடார் தேவாலயத்தில் சிலுவை சரிந்து விழுந்து பாதிரியார் பலி

top-news

குவாயாகில், அக். 20: ஈக்வடார் நாட்டின் குவாயாகில் நகரில் உள்ள தேவாலயமொன்றில் திருப்பலி உரையாற்றிக் கொண்டிருந்த பாதிரியார் மீது சுவரில் பொருத்தப்பட்டிருந்த சிலுவை திடீரென சரிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் 53 வயதான பாதிரியார் பாட்ரிசியோ சான்செஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் இறைமக்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, அவருக்குப் பின்னால் இருந்த சிலுவை திடீரென கீழே விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து நேரலையாக ஒளிபரப்பப்பட்டதால், சம்பவத்தின் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன.

பாட்ரிசியோ சான்செஸின் மரணத்தை குவாயாகில் பேராயர் மறைமாவட்டம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *