மாணவர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்
- Surendran Sumdraraj
- 23 Jul, 2026
புதுடெல்லி, ஜூலை 23-
நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர் போராட்டங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையைக் கண்டித்த அவர், மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதித்த விவகாரத்தில் மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் ஜனநாயகத்திற்கு எதிரானவை என்று விமர்சித்தார். கல்வி அமைப்பில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று, பிரதமர் மோடி மாணவர்களிடம் மன்னிப்பு கேட்பதுடன், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



