பிரித்விராஜின் ‘கலிபா’ படத்தின் டிரெய்லர் வெளியானது
- Surendran Sumdraraj
- 17 Aug, 2026
சென்னை: நடிகர் பிரித்விராஜ் சுகுமாரன் கதாநாயகனாக நடித்துள்ள ‘கலிபா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. வைசாக் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரித்விராஜுடன் அர்ஜுன் தாஸ், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கான கதையை ஜினு ஆபிரகாம் எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே பிரித்விராஜ் நடித்த ‘ஆடம் ஜோன்’, ‘கடுவா’ உள்ளிட்ட திரைப்படங்களுக்குக் கதை எழுதியுள்ளார்.
‘கலிபா’ திரைப்படம் பழிவாங்கும் திரில்லர் கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. வெளியிடப்பட்டுள்ள டிரெய்லரில் அதிரடி காட்சிகள், மோதல்கள் மற்றும் பரபரப்பான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. பிரித்விராஜின் கதாபாத்திரம் மையமாகக் கொண்டு கதை நகர்வது போன்ற காட்சிகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். பிரித்விராஜின் மாறுபட்ட தோற்றம் மற்றும் அதிரடி காட்சிகளுடன் வெளியாகியுள்ள டிரெய்லர், திரைப்படம் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



