ஜொகூர், நெகிரி செம்பிலான் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் விரைவில் தொகுதிப் பங்கீடு
- Surendran Sumdraraj
- 08 Jun, 2026
புத்ராஜெயா, ஜூன் 8 –
ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களுக்கான (PRN) தொகுதிப் பங்கீடு தொடர்பான இறுதி முடிவு பக்காத்தான் ஹராப்பான் (PH) தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் விரைவில் எடுக்கப்படும் என்று கூட்டணியின் தலைமைச் செயலாளர் Saifuddin Nasution Ismail தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், பக்காத்தான் ஹராப்பான் தலைவரும் பிரதமருமான Anwar Ibrahim ஜப்பானுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தை முடித்து வரும் புதன்கிழமையன்று நாடு திரும்பிய பின்னர், தலைவர்கள் மன்றக் கூட்டம் நடத்தப்படும் என்றார்.
ஜொகூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் செயலகக் கூட்டத்தில், மாநிலத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு தொடர்பான முக்கிய விவகாரங்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
“தொகுதிப் பங்கீடு, அதில் இடம்பெற்றுள்ள மோதல் தொகுதிகள் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களும் செயலக மட்டத்தில் பேசி முடிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்த தலைவர்கள் மன்றத்தின் ஒப்புதல் அவசியமாகும்,” என்று சைபுடின் நசூதின் விளக்கமளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

