ஜொகூர் தேர்தல்: காலை 11 மணி வரை 26.43 விழுக்காடு வாக்குப்பதிவு
- Surendran Sumdraraj
- 11 Jul, 2026
ஜொகூர் பாரு, ஜூலை 11-
ஜொகூர் மாநிலத் தேர்தலில் இன்று காலை 11 மணி நிலவரப்படி, வாக்குப்பதிவு விகிதம் 26.43 விழுக்காட்டை எட்டியுள்ளது.
இது கடந்த ஜொகூர் மாநிலத் தேர்தலில் அதே நேரத்தில் பதிவான வாக்குப்பதிவு விகிதத்தை விட அதிகமாகும் என தேர்தல் ஆணையத் தலைவர் Datuk Seri Ramlan Harun தெரிவித்தார்.
அவரின் கூற்றுப்படி, இன்று காலை 11 மணி வரை சுமார் 709,000 வாக்காளர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றியுள்ளனர்.
2022ஆம் ஆண்டு நடைபெற்ற முந்தைய ஜொகூர் மாநிலத் தேர்தலில், காலை 11 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு விகிதம் சுமார் 21 விழுக்காடு மட்டுமே இருந்தது.
இதனால், இம்முறை வாக்குப்பதிவு தொடக்கத்திலேயே நேர்மறையான முன்னேற்றத்தைக் காட்டுவதாக Ramlan Harun கூறினார்.
“இந்த வேகம் மாலை வரை தொடர வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அதிகமான பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க வருவது முக்கியம்,” என அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



