“பி.என். கட்சிக்கு மாற்று திட்டம் உள்ளது” – மலாக்கா தேர்தல் குறித்து அப்துல் ஹாடி

top-news
FREE WEBSITE AD

மாராங்: மலேசியாவின் பெரிகாத்தான் நேஷனல் (பி.என்.) கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் பாஸ் கட்சி, மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் நேஷனல் கூட்டணி பக்காத்தான் ஹரப்பான் (பி.எச்.) உடன் இணைந்து போட்டியிட முடிவு செய்தாலும், அதற்கு மாற்றுத் திட்டம் வைத்துள்ளதாக பாஸ் கட்சித் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.

எனினும், மலாக்கா தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பி.என். தலைவர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருவதாக அவர் கூறினார். குறிப்பாக, பாரிசான் நேஷனல் தலைவர்களுடன் தேர்தல் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடர்வதால், இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அப்துல் ஹாடி கூறினார். பாரிசான் நேஷனலில் உள்ள பெரும்பாலான தலைவர்கள் தொடர்ந்து ஒத்துழைப்பை மேற்கொள்ள ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *