நவம்பர் 14-ல் மலாக்கா மாநிலத் தேர்தல்; அக்.31 வேட்புமனுத் தாக்கல்
- Surendran Sumdraraj
- 07 Oct, 2026
மலாக்கா, அக். 7: மலாக்கா மாநிலத்தின் 16-ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறும் என்று மலேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரம்லான் ஹாருன் இதனை இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை அறிவித்தார்.
அதன்படி, மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 31-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் பிரச்சாரம் தொடங்கும்.
தேர்தல் பிரச்சார காலம் அக்டோபர் 31-ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 13-ஆம் தேதி இரவு 11.59 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, காவல்துறை, பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட முன்கூட்டியே வாக்களிக்கத் தகுதியுடைய வாக்காளர்களுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு நவம்பர் 10-ஆம் தேதி நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து நவம்பர் 14-ஆம் தேதி மலாக்கா மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் சிறப்புக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரம்லான் ஹாருன், மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான முக்கிய தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

