தேர்தல் பிரச்சார பேச்சு: சனுசி, ரெம்பாவ் அம்னோ தலைவரிடம் போலீஸ் விசாரணை

top-news

நீலாய், ஜூலை 28-

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின்போது வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பாக, கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் சனுசி முகமது நோர் மற்றும் ரெம்பாவ் அம்னோ தலைவரிடம் விரைவில் வாக்குமூலம் பெற போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸாஃப்னி அகமட் கூறினார்.

ரெம்பாவ் அம்னோ தலைவர் தொடர்பாக இதுவரை 11 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், முகமட் சனுசி தொடர்பான புகார்கள் புதுப்பிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

“டத்தோஸ்ரீ சனுசி வெளியிட்டதாகக் கூறப்படும் கருத்துகள் தொடர்பாக இரண்டு போலீஸ் புகார்கள் கிடைத்தவுடன், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 505(b) மற்றும் 1998ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233-ன் கீழ் விசாரணை ஆவணம் திறக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

மேலும், சனுசியிடம் இதுவரை வாக்குமூலம் பெறப்படவில்லை என்றும், அதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நீலாய் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் அமைக்கப்பட்டிருந்த முன்கூட்டிய வாக்குப்பதிவு மையத்தை இன்று பார்வையிட்ட பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *