நெகிரி செம்பிலான் தேர்தல் பிரசாரங்களுக்கு 141 அனுமதி

top-news

சிரம்பான், ஜூலை 21-

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 16-ஆவது மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, ஜூலை 18 முதல் 20 வரை அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த 143 பிரசார நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்ட அனுமதி விண்ணப்பங்களில் 141-க்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். இதனை நெகிரி செம்பிலான் மாநில காவல்துறை தலைவர் டத்தோ அல்ஸாஃப்னி அகமத் தெரிவித்துள்ளார்.

அனுமதி வழங்கப்பட்ட அனைத்து அரசியல் நிகழ்ச்சிகளும் மலேசிய அரச காவல்துறையின் (PDRM) கண்காணிப்பில் நடைபெற்று வருவதாகவும், நிகழ்ச்சிகள் சட்ட விதிமுறைகளை பின்பற்றுகிறதா என்பதையும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பொது அமைதி பாதிக்கப்படாத வகையில் நடைபெறுகிறதா என்பதையும் காவல்துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் கூறினார்.

மேலும், அதே காலகட்டத்தில் தேர்தல் தொடர்பாக மொத்தம் 7 காவல் நிலைய புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றின் அடிப்படையில் 4 விசாரணை ஆவணங்கள் (கேஸ் பேப்பர்கள்) பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதில் 2 வழக்குகள் நேற்று மட்டும் பதிவு செய்யப்பட்டவை என்றும், அவை தேர்தல் விதிமீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளை உள்ளடக்கியவை என்றும் கூறினார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *