நெகிரி செம்பிலான் வளர்ச்சிக்கு பி.எச். தேர்தல் அறிக்கை வழிகாட்டும்: வேட்பாளர்கள் நம்பிக்கை

top-news

சிரம்பான், ஜூலை 21-


நெகிரி செம்பிலான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி மக்கள் மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை வழங்கினால், பக்காத்தான் ஹாராப்பான் (PH) கூட்டணியின் தேர்தல் அறிக்கை மாநில வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்தியாக அமையும் என்று அக்கூட்டணியின் வேட்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த தேர்தல் அறிக்கை, ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை தொடர்வதோடு மட்டுமல்லாமல், மாநிலத்தின் நீண்டகால வளர்ச்சிக்கு உதவும் பல உயர்தாக்கம் கொண்ட புதிய திட்டங்களையும் உள்ளடக்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

அதில், சிரம்பான் சென்ட்ரல் ஒருங்கிணைந்த நகர மேம்பாட்டுத் திட்டம், என்ஸ்டெக் மருத்துவமனை கட்டுமானம், போர்ட் டிக்சனில் ஏஐ மிட்போர்ட் (AI Midport) திட்டம், பெல்டா (FELDA) இரண்டாவது வீட்டு திட்டம், மேலும் செனாவாங்–போர்ட் டிக்சன்–போர்ட் கிள்ளான் ஆகிய பகுதிகளை இணைக்கும் புதிய புறவழிச் சாலை அமைப்பு போன்ற முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

நீலாய் சட்டப்பேரவைத் தொகுதிக்கான பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் ஜே. அருள் குமார் கூறுகையில், இந்த திட்டங்கள் போக்குவரத்து மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதுடன், புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கி, முதலீடுகளை ஈர்த்து, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் என்றார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *