ஜெம்போல் எம்.பி.க்கு எதிராக தூண்டுதல் பேச்சு குற்றச்சாட்டு; போலீசார் விசாரணை தொடக்கம்
- Surendran Sumdraraj
- 29 Jul, 2026
சிரம்பான், ஜூலை 29-
ஜெம்போல் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஷாம்சுல்கஹார் முகமது டெலிக்கு எதிராகத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆற்றிய உரையில் தூண்டுதல் மற்றும் சட்டவிரோத அம்சங்கள் இருப்பதாகக் கூறி நெகிரி செம்பிலான் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்சாஃப்னி அகமது வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
சமூக வலைதளத்தில் பரவிய காணொளி தொடர்பாக 55 வயதுடைய ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டதாக அவர் சொன்னார். அந்தக் காணொளியில், சிரம்பான் ஜெயாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்வில் ஷாம்சுல்கஹார் ஆற்றிய உரை இடம்பெற்றிருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 505(b), தேர்தல் குற்றங்கள் சட்டம் 1954-இன் பிரிவு 4(A)(1), மற்றும் தொடர்பாடல் மற்றும் பல்லூடக சட்டம் 1998-இன் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் வாக்குமூலம் பெறப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணை நிறைவடைந்த பின்னர், சட்டத்தின் அடிப்படையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

