சபாவில் பக்காத்தானுடன் கூட்டணி அமைத்தாலும் பாரிசானுடன் சிந்திக்க வேண்டும்! – GRS தலைவர்!

top-news

நவம்பர் 10,

சபாவில் ஆட்சி அமைத்திருக்கும் தற்போதைய கட்சியான Parti Gagasan Rakyat Sabah கட்சியின் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாக சபா மாநில முதல்வரும் GRS கட்சியின் தலைவருமான Datuk Seri Hajiji Noor உறுதியாகத் தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட தலைவர்களுடன் சந்திப்பும் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வருவதாகவும் எந்த மாதிரியானப் பேச்சு வார்த்தையாக இருந்தாலும் சபாவில் ஆட்சி அமைப்பது சபா மாநிலக் கட்சியாக மட்டுமே இருக்க வேண்டும் என தீரக்கமாகத் தாம் இருப்பதாக Datuk Seri Hajiji Noor தெரிவித்தார்.

தற்போதைய நிலவரப்படி GRS + PAKATAN கூட்டணிக்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தாலும் பாரிசானுடனானக் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.
முந்தைய சபா மாநிலத் தேர்தலில் 79 சட்டமன்றத் தொகுதிகளில் GRS தலைமையில் 55 சட்டமன்றத் தொகுதிகளைப் பெற்று ஆட்சி அமைத்தாலும் தற்போது அரசாங்கத்துடன் இணைந்து தேர்தலைச் சந்திப்பதைத் தாம் தவிர்க்கவில்லை என GRS கட்சியின் தலைவரும் மாநில முதலமைச்சருமான Datuk Seri Hajiji Noor விளக்கமளித்தார்.

Ketua Menteri Sabah, Datuk Seri Hajiji Noor, menyatakan GRS mempertimbangkan kerjasama dengan Pakatan di Sabah, namun rundingan bersama Barisan tetap diteruskan. Sabah harus dikendalikan oleh parti tempatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *