மலாக்கா தேர்தலில் டி.ஏ.பிக்குப் போதுமான வெற்றி! – அந்தோணி லோக்!
- THINAGAREN SANGGAREN
- 16 Nov, 2026
நவம்பர் 16,
மலாக்கா தேர்தலில் டி.ஏ.பி தனது சட்டமன்றங்களைத் தக்க வைத்துக் கொண்டது போதுமான வெற்றியாகக் கருதப்படுவதாக டி.ஏ.பி பொதுச் செயலாளர் Anthony Loke தெரிவித்துள்ளார். டி.ஏ.பி கடந்த 2021 மலாக்கா மாநிலச் சட்டமன்றத்தில் டி.ஏ.பி வெற்றிப் பெற்ற AYER KEROH, KESIDANG, KOTA LAKSAMANA, BANDAR HILIR சட்டமன்றங்களை டி.ஏ.பி மீண்டும் இவ்வாண்டு நடைபெற்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளதை Anthony Loke சுட்டிக்காட்டினார். பக்காத்தான் கூட்டணியில் பி.கே.ஆர் அமானா கட்சிகள் போட்டியிட்ட அனைத்து சட்டமன்றங்களிலும் தோல்வி அடைந்தாலும் டி.ஏ.பி அதன் வெற்றியை உறுதி செய்துள்ளதாக Anthony Loke தெரிவித்துள்ளார்.
2021 நடைபெற்ற மலாக்கா மாநிலத் தேர்தலில் AYER KEROH சட்டமன்றத்தில் டி.ஏ.பி 5,624 வாக்குகள் பெற்றிருந்தது. தற்போது நடைபெற்ற தேர்தலில் டி.ஏ.பி 5,604 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது.
2021 நடைபெற்ற மலாக்கா மாநிலத் தேர்தலில் KESIDANG சட்டமன்றத்தில் டி.ஏ.பி 10,237 வாக்குகள் பெற்றிருந்தது. தற்போது நடைபெற்ற தேர்தலில் டி.ஏ.பி 9,352 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது.
2021 நடைபெற்ற மலாக்கா மாநிலத் தேர்தலில் KOTA LAKSAMANA சட்டமன்றத்தில் டி.ஏ.பி 11,494 வாக்குகள் பெற்றிருந்தது. தற்போது நடைபெற்ற தேர்தலில் டி.ஏ.பி 9,424 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது.
2021 நடைபெற்ற மலாக்கா மாநிலத் தேர்தலில் BANDAR HILIR சட்டமன்றத்தில் டி.ஏ.பி 7,778 வாக்குகள் பெற்றிருந்தது. தற்போது நடைபெற்ற தேர்தலில் டி.ஏ.பி 7,857 வாக்குகள் பெற்றுள்ளது.
மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் டி.ஏ.பி சுமார் 2,896 வாக்குகளை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *

