ஆதரவை இழக்கும் பெரிக்காத்தான்! எழுச்சி அடையும் பாரிசான்!

top-news

நவம்பர் 16,

மலாக்கா மாநிலத் தேர்தலில் பாரிசானும் பெரிக்காத்தானும் இணைந்ததால் பாரிசானுக்கு அபாரமான ஆதரவு கிடைத்துள்ளது. கடந்த 2021 தேர்தலுடன் ஒப்பிடுகையில் பாரிசானின் வாக்குகள் அதிகரித்துள்ளது. அதே வேளையில் இது பெரிக்காத்தானுக்குப் பாதகமாகவும் அமைந்துள்ளது. கடந்த 2021 நடைபெற்ற மலாக்கா மாநிலத் தேர்தலில் பாரிசான் 21 சட்டமன்றங்களில் மொத்தம் 122,741 வாக்குகளைப் பெற்றிருந்தது. இது மொத்த மலாக்கா மாநில வாக்காளர்களில் 38.4% ஆகும். 2026 மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பாரிசான் 21 சட்டமன்றங்களில் போட்டியிட்டு 236,982 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது மொத்த மலாக்கா மாநில வாக்காளர்களில் 48.5% ஆகும். 

ஆனால் பெரிக்காத்தான் கடந்த 2021 மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 77,731 வாக்குகளைப் பெற்றிருந்தது. இது மொத்த மலாக்கா மாநில வாக்காளர்களில் 24.3% ஆகும். ஆனால் 2026 நடைபெற்ற மலாக்கா மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் பாரிசானுடன் கூட்டணி அமைத்து 68,017 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது. இது மலாக்கா மாநில மொத்த வாக்காளர்களில் 13.9% மட்டுமே. சுமார் 10% வாக்காளர்களைப் பெரிக்காத்தான் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பக்காத்தான் கடந்த 2021 ஆம் ஆண்டு மலாக்கா மாநிலத் தேர்தலில் 114,457 வாக்குகளைப் பெற்றது. 2026 தற்போது நடைபெற்ற தேர்தலில் பக்காத்தான் கூட்டணி 143,266 வாக்குகள் பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகளை விடவும் இந்த தேர்தலில் 28,809 வாக்குகள் அதிகமாகப் பக்காத்தான் பெற்றுள்ளது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்