சட்டமன்றத் தேர்தலில் ANTHONY LOKE வெற்றி பெறுவாரா? PROF RAMASAMY கணிப்பு!

top-news

ஜுலை 28,

டி.ஏ.பியின் பொதுச் செயலாளரும் போக்குவரத்து அமைச்சராகவும் இருக்கும் ANTHONY LOKE நெகிரி செம்பிலான் Chennah சட்டமன்றத் தேர்தலில் அபாரமாக வெற்றி பெறாமல், கணிசமான பெரும்பான்மையில் வெற்றி பெறுவார் என பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வரும் உரிமை கட்சியின் தலைவருமான பேராசிரியர் ராமசாமி தெரிவித்தார். 2018 நெகிரி செம்பிலான் தேர்தலில் அந்தோணி லோக் 1,155 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். 2023 நெகிரி செம்பிலான் தேர்தலில் அந்தோணி லோக் 2,200 பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். ஆனால் அதே நிலை இப்போதும் நீடிக்காது என பேராசிரியர் ராமசாமி எச்சரித்தார்.

போக்குவரத்து அமைச்சின் ஒரு சில நடவடிக்கைகளால் பெரும்பாலான ஓட்டுநர்கள் அதிருப்தியில் உள்ளனர். சிலாங்கூரின் பன்றிகள் வளர்ப்பதில் ஏற்பட்ட பிரச்சனையை டி.ஏ.பி கண்டுக் கொள்ளவில்லை, UEC எனும் ஒருங்கிணைந்த தேர்வு முறைமைகளை நடைமுறைப்படுத்துவதில் டி.ஏ.பியின் தாமதம் என முக்கிய பிரச்சனைகளில் பெரும்பாலான சீனர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் 2023 ஆம் ஆண்டு டி.ஏ.பிக்கு இருந்த சீனர்களின் ஆதரவு போல 2026 இருக்காது என பேராசிரியர் ராமசாமி தெரிவித்தார். ஆனால் Chennah சட்டமன்றத்தில் பெரும்பான்மையான மலாய்க்காரர்கள் அந்தோணி லோக்கிற்கு ஆதரவளிப்பார்கள். ஏனெனில் அந்தோணி லோக் மலாய் ஆட்சியாளர்கள் மீது அரச குடும்பத்தின் மீது மிகுந்த மரியாதைக் கொண்டவர். Chennah சட்டமன்றத்தில் 2013 முதல் 13 ஆண்டுகள் தொடர்ச்சியாக ANTHONY LOKE சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *