தயாரிப்பாளரும் இயக்குநரும் கணவன்-மனைவி போல இருக்க வேண்டும்: சுந்தர்.சி

சென்னை, அக். 7: திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநரும் கணவன்-மனைவி போல ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்று இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தியாகராஜா டாக்கீஸ் என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசியபோது அவர் இவ்வாறு கூறினார். தியாக குறிஞ்சி செல்வன் மற்றும் டாக்டர் ஆர்.விஜயலட்சுமி இணைந்து இந்த புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.

விழாவில் பேசிய சுந்தர்.சி, ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்பே தயாரிப்பாளரும் இயக்குநரும் திட்டங்களைத் தெளிவாக வகுத்துக் கொள்ள வேண்டும் என்றார். இயக்குநர் நெருங்கிய நண்பராக இருந்தாலும், சினிமாவைப் பொறுத்தவரை திட்டமிடல் மிகவும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

படப்பிடிப்பை முறையாக திட்டமிட்டு, முடிந்தவரை ஒரே அட்டவணையில் நிறைவு செய்ய முயற்சிக்க வேண்டும் என்றும், தயாரிப்பாளர்-இயக்குநர் இடையிலான நல்ல புரிதலும் உறவும் ஒரு திரைப்படத்தின் வெற்றிகரமான தயாரிப்புக்கு முக்கியமானது என்றும் சுந்தர்.சி தெரிவித்தார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *