பிப்ரவரியிலேயே மலேசிய பொதுத் தேர்தல்? – டிஏபி முடிவால் அரசியல் பரபரப்பு

top-news

கோலாலம்பூர், ஆக. 5-

ஜனநாயக செயல் கட்சி (DAP) ஒற்றுமை அரசுக்கு தனது ஆதரவை 2027-ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் தாக்கல் செய்யப்படும் அக்டோபர் மாதம் வரை மட்டுமே தொடர முடிவு செய்தால், 16-ஆவது பொதுத் தேர்தல் (PRU16) அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே நடைபெற வாய்ப்புள்ளதாக முன்னாள் பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஓங் கியான் மிங் தெரிவித்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள டிஏபியின் சிறப்பு தேசிய மாநாட்டில், ஒற்றுமை அரசுக்கான ஆதரவை உடனடியாக வாபஸ் பெறுவதா, ஆட்சிக் காலம் முடியும் வரை தொடர்வதா அல்லது குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே நீட்டிப்பதா என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என அவர் கூறினார்.

அதேபோல், டிஏபி சார்பில் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் பதவி விலகுவது தொடர்பான முடிவுகளும் அந்த மாநாட்டில் பரிசீலிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

சீன வாக்காளர்களிடையே பாக்காத்தான் ஹாராப்பான் (PH) கூட்டணிக்கான ஆதரவு தொடர்ந்து குறைந்து, அது மலாக்கா மற்றும் சரவாக் மாநிலத் தேர்தல்களிலும் எதிரொலித்தால், டிஏபியின் அரசியல் நிலை மேலும் பாதிக்கப்படலாம் என கியான் மிங் எச்சரித்தார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *